Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பூமியை நோக்கி மிக வேகமாக நெருங்கும் ஆபத்தான பைத்தான் சிறுகோள்...!

"பைத்தான்' ராட்சத சிறுகோளின் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் சூரியனைச் சுற்றி வருகின்றன.

சூரிய குடும்பத்தில் சுமார் ஒரு லட்சம் சிறுகோள்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. சூரிய குடும்பத்தின் ஆரம்பகால அமைப்பிலிருந்து எஞ்சிய, பாறை வடிவம்தான் இந்தச் சிறுகோள்கள் ஆகும்.

அந்த வகையில், "பைத்தான்' என்ற ராட்சத சிறுகோள் பூமியை நோக்கி மிக வேகமாக வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த சிறுகோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் உள்ளதால், கிரேக்க புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான "பைத்தான்' என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்த ராட்சத சிறுகோளானது வருகிற 2028-ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் "பைத்தான்' ராட்சத சிறுகோள் கடந்து செல்ல உள்ளதால் இது "டெஸ்டினி பிளஸ்" என்ற விண்கலத்தின் கண்காணிப்பில் உள்ளது.

இந்த நிலையில், "பைத்தான்' ராட்சத சிறுகோளின் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் சுழற்சி வேகமானது நான்கு மில்லி விநாடிகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments