Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

லண்டனில் கொடிய நோயுடன் போராடும் இலங்கை தமிழ் செய்தியாளர்...!

பிரித்தானியாவில் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் ஜோர்ஜ் அழகையாவுக்கு மீண்டும் புற்றுநோய் தீவிரமாக பரவியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இலங்கையை சேர்ந்த தமிழரான ஜோர்ஜ் அழகையா, தனது பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரபல செய்தி வாசிப்பாளரான 66 வயதான ஜோர்ஜ் அழகையா 2014ஆம் ஆண்டு 4 ஆம் நிலை குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதனை கண்டுபிடித்தார்.

இந்நிலையில் உடல் நிலை தீவிரமடைந்ததனையடுத்து 2021ஆம் ஆண்டு அவர் ஓய்வு எடுப்பதாக அறிவித்தார். எனினும் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

அவரது முதல் நோயறிதலில் இருந்து, அழகையா சுமார் 100 சுற்று கீமோதெரபி சிகிச்சைக்கு உட்பட்டுள்ளார். சமீபத்திய ஸ்கேனில் புற்றுநோய் மேலும் தீவிரம் அடைந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் பணியில் இருந்து விலகியிருக்க ஜோர்ஜ் திட்டமிட்டுள்ளார். எனது சக ஊழியர்களை காணாமல் இருப்பது கவலையளிக்கும்.

செய்தி அறையில் பணிபுரிவது உற்சாகமாகவும் உந்துதலுடனும் இருப்பதில் முக்கியமான பகுதியாகும். என்னால் முடிந்தவரை விரைவில் அந்த ஸ்டுடியோவிற்கு வருவேன் என்று ஜோர்ஜ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோயை எதிர்த்துப் ஜோர்ஜ் மீண்டும் பிபிசிக்கு பணிக்கு திரும்ப விரும்பம் கொண்டுள்ளார் என, அவருக்கு நெருக்கமான சக ஊடகவியலாளர் மேரி கிரீன்ஹாம் தெரிவித்துள்ளார்.

காலையிலிருந்து அங்கு இருந்த நான் மாலை ஏழு மணிக்கு அந்த செய்தி அறையை விட்டு வெளியேறும் நேரத்தில், நான் உடல் ரீதியாக முற்றிலும் பலவீனமாக இருக்கிறேன், ஆனால் மனரீதியாக நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன்.

என்னை எப்போதும் போலவே நடத்துமாறும் பணியாளர்களுடன் இருப்பது மனநிறைவை தருவதாக, ஜோர்ஜ் குறிப்பிட்டதாக, மேரி கிரீன்ஹாம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments