Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!

பிரான்ஸில் மின்சார எறும்பு (fourmi électrique) என அழைக்கப்படும் மிக ஆபத்தான எறும்பு வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த எறும்பு பிரான்ஸில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த எறும்பு வகையானது தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. கடந்த வருட இறுதியில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட இந்த எறும்புகள் தற்போது பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வகை எறும்புகள் கடித்தால் உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கும் என்பதால், அதற்கு ‘மின்சார எறும்புகள் என பெயரிடப்பட்டுள்ளதாக பிரான்ஸின் பல்லுயிர் மற்றும் சூழலியல் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது.

கடந்தவாரத்தில் துலுன் நகரில் இவ்வகை எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவக்குழு இது தொடர்பாக தெரிவிக்கும் போது, இவ்வகை எறும்புகள் கடித்தால் அப்பகுதியில் எரிவு தன்மை ஏற்படும் எனவும் இரண்டில் இருந்து மூன்று மணிநேரங்களுக்கு உடலில் வலி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மின்சார எறும்பு ஐரோப்பாவில், ஸ்பெயினில் உள்ள மலாகா பகுதியில் ஒரு முறை மட்டுமே காணப்பட்டது. மின்சார எறும்பு பிரான்ஸில் ஒரு தாவர போக்குவரத்தின் போது நாட்டிற்கு வந்துள்ளதென கருதுகிறது.


தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி உணர்வை ஏற்படுத்தும் எனவும் இந்த 2-3 மணிநேரம் நீடிக்கும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனம்ன் மிகவும் ஆக்கிரமிப்பு தன்மையை கொண்டுள்ளதென முதற்கட்ட பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது உலகின் 3வது மிகவும் ஆக்கிரமிப்பு எறும்புகளில் ஒன்றாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தாவரங்கள் அல்லது பச்சைக் கழிவுகளில் எளிதில் பரவுக்கூடிய எறுப்பு வகைகளால் இதனை வகைகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் எறும்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி மக்கள் இதன் ஆக்கிரமிப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments