Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் புதிய கட்டுப்பாடு...!

  

பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதை அடுத்து, (Seine-Saint-Denis) மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு ஒன்று அமுலுக்கு வந்துள்ளது.

அதற்கமைய, இம்மாவட்டத்தில் உள்ள நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் (jerry cans) எரிபொருட்களை விற்பனை செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வாங்கவோ/விற்பனை செய்யவோ தடை செய்யப்படுவதாக 93 ஆம் மாவட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை கொள்வவு செய்வதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

முன்னதாக இதே கட்டுப்பாடு பா-து-கலே மாவட்டத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்ரெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்திலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் மக்களுக்கு எரிபொருள் தட்டுபாடு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பதற்றம் சென்ரெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்திலும் உணரப்படுகிறது.

விநியோகச் சிக்கல்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் நிலையங்களுக்குச் செல்வதால், கடுமையான நெரிசல் மற்றும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் மக்கள் அமைதியாகவும் நாகரீகத்துடனும் நடந்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தால் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் பல நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில் உள்ள 6 எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளில் மூன்று சனிக்கிழமையன்று மூடப்பட்ட நிலையில் நெருக்கடி நிலை தீவிரமடைந்தது.

Post a Comment

0 Comments