Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

'ஒரு மாநிலத்துக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்?' - மீண்டும் கேரள அரசை சீண்டிய ஆளுநர்

போதைப் பொருள்களின் தலைநகராக பஞ்சாப் பதிலாக கேரளா மாறுகிறது என காட்டமாக விமர்சித்துள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான்.

கேரளா மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், போதைப் பொருள்களின் தலைநகராக பஞ்சாப் பதிலாக கேரளா மாறுகிறது என விமர்னம் செய்தார்.



இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''நமது வளர்ச்சிக்கு மதுவும், லாட்டரியும் போதும் என நாம் முடிவு செய்திருக்கிறோம். 100 சதவீதம் கல்வியறிவு கொண்ட ஒரு மாநிலத்துக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? மாநிலத்தின் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாக லாட்டரியும், மதுவும் இருப்பதை நினைத்து, மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் வெட்கப்படுகிறேன். 

போதைப் பொருள்களின் தலைநகராக பஞ்சாப் பதிலாக கேரளா மாறுகிறது. எல்லோரும் மது அருந்துவதற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் இங்கு மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. லாட்டரி என்றால் என்ன? இங்கு இருக்கும் யாராவது லாட்டரி சீட்டு வாங்கியது உண்டா? வெறும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். அவர்களை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமைப்படுத்துகிறீர்கள்.

துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுநரின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றமே முன்பே தெளிவுபடுத்தியது. அதில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. அரசு ஏதேனும் சட்டம் இயற்றினால், அது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments