Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்கள் கைது...!

 

உத்தரபிரதேசத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளம் மூலம் அதே பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

அந்த பெண்ணை நேரில் சந்திக்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதித்த அந்த பெண் தனியாக மருத்துவரை சந்திக்க கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணை தன்னுடன் ஹாஸ்டலுக்கு வரும்படி அந்த மருத்துவர் வற்புறுத்தி அழைத்துள்ளார். அதற்கு இணங்கிய அந்த பெண், அவருடைய ஹாஸ்டலுக்கு சென்றார். அங்கே அந்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அந்த மருத்துவரின் 2 நண்பர்கள் காத்திருந்தனர். பின்னர் அந்த பெண்ணை ஓர் அறையில் அடைத்து மருத்துவர்கள் மூவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், லக்னோ போலீசிடம் செப்டம்பர் 27ம் தேதி புகாரளித்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த அதிர்ச்சி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Post a Comment

0 Comments