Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன் சேஸ் - சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி...!

டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 'சூப்பர் 12' சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால் வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது மட்டுமில்லாமல், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தி்ல் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் விராட் கோலி.


image

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்கிற இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகரமாக விரட்டிப் பிடித்தது இந்திய அணி. இதுவே டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் விராட் கோலி 4வது முறையாக இறுதிப்பந்து வரை களத்தில் ஆட்டமிழாக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலியின் சராசரி 308 ஆக உயர்ந்துள்ளது.

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரை பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால், இந்தியா வெற்றிபெற 5 பந்துகளில் 16 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் 2-வது பந்தை சந்தித்தார். அவர் அந்த பந்தில் 1 ரன் எடுத்தார்.  3-வது பந்தை சந்தித்த கோலி 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தை நவாஸ் நோ-பாலாக வீச அந்த பந்தை விராட் கோலி சிக்சருக்கு விளாசினார். இதனை தொடர்ந்து 'ஃப்ரி-ஹிட்' முறையில் 4வது பந்தை மீண்டும் வீசும் சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் 4-வது பந்து வீச அது ஓய்ட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் ஃப்ரி-ஹிட் பந்து வீச கோலி போல்ட் ஆனார். ஆனால், ஃப்ரி-ஹிட் பந்தில் அவுட் கிடையாது என்பதால் அதைப் பயன்படுத்தி கோலி 3 ரன்கள் ஓடினார்.

image

பின்னர், 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 5வது பந்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் களமிறங்கினார். நவாஸ் வீசிய கடைசி பந்து ஒயிட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா 159 ரன்களை எட்டி பாகிஸ்தான் அணியின் ரன்னை சமன் செய்தது. ஒயிட் வீசப்பட்டதால் கடைசி பந்து மீண்டும் வீசப்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் பந்தை மிட்ஆன் திசைக்கு அஸ்வின் விளாசி 1 ரன் ஓடினார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. அதன்படி பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றிபெற்றது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments