Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தொடரை வெல்வது யார்? - இந்தியா- தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை....!

 

தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீமானிக்கும் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை தீமானிக்கும் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.



இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் ஏமாற்றுகின்றனர். கேப்டன் ஷிகர் தவான் கடந்த இரு போட்டிகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சுப்மன் கில்லும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் இருவரும் இன்று வலுவான தொடக்கம் தரவேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றும் அவர்கள் மிரட்டக்கூடும். இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த வருடம் நடக்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும். இதனால் அந்த அணி வெற்றி பெற எல்லா வகையிலும் போராடும்.

டெல்லியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது அல்லது முகேஷ்குமார், முகமது சிராஜ், அவேஷ்கான், குல்தீப் யாதவ்.

தென்னாப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா, இங்கிடி, ககிசோ ரபடா.

Post a Comment

0 Comments