Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐரோப்பிய எரிவாயு குழாயில் நான்காவது கசிவு கண்டுபிடிப்பு...!

ஐரோப்பாவின் எரிவாயு விநியோகக் குழாய்க் கட்டமைப்பான நோர்ட் ஸ்ட்ரீம் அமைப்பில் நான்காம் கசிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குழாய்க் கட்டமைப்பில் இவ்வார ஆரம்பத்தில் வெடிப்புகள் நேர்ந்தன. டென்மார்க்கில் 2 கசிவுகளும் சுவீடனில் 2 கசிவுகளும் உண்டானதாக சுவீடனின் கடலோரக் காவற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுவீடிஷ் பகுதியில் ஏற்பட்ட கசிவுகள் இரண்டும் மிக அருகில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கசிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் தெரியவந்தது ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகள் வேண்டுமென்றே விளைவிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. தான் அவ்வாறு செய்யவில்லை என்று ரஷ்யாவும் அமெரிக்காவும் கூறியுள்ளன.

சம்பவத்தின் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடி பேச்சுவார்த்தை நடத்தியது.

அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை அமைப்பு, நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஜெர்மனியிடம் முன்னதாக எச்சரித்திருந்தது. ஆனால் அந்தக் கசிவுகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது தெரியவில்லை.

ரஷ்யா தான் அதைச் செய்தது என்று உக்ரைன் உறுதியாகக் கூறுகிறது.

Post a Comment

0 Comments