Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக்கோப்பை வரலாற்றில் சரித்திரம் படைக்க போகும் IND Vs PAK கிரிக்கெட் போட்டி!

 

உலககோப்பை வரலாற்றில் ஒரு கிரிக்கெட் போட்டியை காண அதிகளவு பார்வையாளர்கள் கலந்துக்கொண்ட நிகழ்வாக, நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கப்போகும் போட்டி அமையப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுமார் 90,000 பார்வையாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வரவிருக்கின்றனர். இந்நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்படுமோ என்னும் அச்சம் ரசிகர்களிடையே நிலவுகிறது.

2022ஆம் ஆண்டின் டி20 உலககோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி உள்ளது. அதேநேரம், அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் நகரில் வானிலை மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் இடையே கவலையும் ஏற்பட்டுள்ளது.



2022 டி20 உலகக் கோப்பையில் மிகச்சிறந்த வீரர்களை கொண்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (எம்சிஜி) போன்ற சின்ன ஸ்டேடியத்தில் மோதிகின்றன. அந்த போட்டியைக்காண சுமார் கிட்டத்தட்ட 90,000 பேர் அரங்கில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் பெரிய மோதலுக்கு உலகளாவிய கிரிக்கெட் அரங்கில் உண்மையான உற்சாகம் இருந்தாலும், மெல்போர்ன் நகரத்தின் வானிலை அறிக்கை கவலையே அளிக்கிறது. வானிலை கணிப்பு படி, மெல்போர்ன் நகரில் போட்டி நடைபெறும் நாளில் 60% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.



கடந்த காலங்களில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் சந்தித்த போட்டிகளான, பர்மிங்காமில் நடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2016 டி20 உலகக் கோப்பை, கொல்கத்தாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி மற்றும் 2019 பர்மிங்காமில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியின் போதும் மழையால் சில ஓவர்கள் குறைக்கப்பட்ட போதிலும், போட்டி நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மெல்போர்னில் குளிருடன் போராட வேண்டியதாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அன்று அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கிடப்பட்டுள்ளது.



இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் சூப்பர் 12 சுற்று போட்டிகளில் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments