பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சான்டோ மாகாணத்தில், அராகுரூஸ் என்ற நகரில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இரண்டு பள்ளிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ராணுவ உடை அணிந்து வந்த அவர்கள் பள்ளிகளில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
அராகுரூஸில் உள்ள 2 பள்ளிகளில் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோலூலா டி சில்வாவும்இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஸ்கர் அலி - பத்திரிகையாளர்
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments