Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கத்தாரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை...!

கத்தார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தும் வளைகுடா நாடான கத்தார் நாட்டின், தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை விவகாரத்தில் கத்தார் நிலைப்பாடு என்ன?

இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவு ஒழுக்கக் கேடானது என்று கருதப்படுவதால் கத்தாரில் தன் பாலினத்தவர் உறவு சட்டவிரோதமாகும்.

அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, மரண தண்டனை கூட விதிக்கப்படும் வகையில் இங்கே சட்டம் உள்ளது.

கால்பந்து போட்டிகளை பார்க்க ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகின்றனர். யாரும் பாகுபாடு காட்டப்படமாட்டார்கள் என கத்தார் உலக்கோப்பை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் கத்தார் 2022 தலைமை பொறுப்பாளர் நசீர் அல் காதர், ஓரினச்சேர்க்கை குறித்த சட்டங்களில் அரசு மாற்றம் செய்யாது. எனவே பார்வையாளர்கள் தங்களது கலாசாரத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கத்தாரில், பொது இடத்தில் இணையர்களுக்கு இடையேயான ஈர்ப்பானது-அது ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்தாலும் சரி அல்லது ஆண், பெண் இடையேயானதாக இருந்தாலும் அதிருப்தியளிக்கக் கூடியதே என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஓரினச் சேர்க்கையாளர்கள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை, திரு நம்பியர் ஆகிய மக்களை கத்தார் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து கைது செய்து வருகின்றன. சில நேரங்களில் அவர்களின் பாலின வேற்றுமைகளை சீரமைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த அறிக்கை பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக கத்தார் அரசு கூறுகிறது.

மக்கள் எவ்வாறு போராட்டம் நடத்தினர்?
தன்பாலின உறவாளர்களுக்கு எதிரான சட்டத்தை கைவிடும்படி கத்தார் நாட்டை வலியுறுத்தி ஆஸ்திரேலிய கால்பந்து படை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.

வீடியோவில், உலகக் கோப்பை இறுதி போட்டிகளுக்கான கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட தோராயமாக 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து இந்த அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.

கட்டடப்பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பலர் காயம் அடைந்ததாகவும் அல்லது பலர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கத்தாரின் மனித உரிமை மீறல்கள் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டென்மார்க் கால்பந்தாட்ட வீரர்கள், முழுவதும் கறுப்பு கிட் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளதாக கூறினர்.

ஐரோப்பாவின் இதர 9 கால்பந்தாட்ட அணிகளின் கேப்டன்களுடன் சேர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், கத்தாரின் ஓரினச்சேர்க்கையாளர்க்கு எதிரான சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரே காதல் என்ற கை பட்டையை அணிய உள்ளார்.

பிரான்ஸ் நடப்பு சாம்பியனாக இருந்தபோதிலும், பாரீஸ் உள்ளிட்ட பிரான்ஸ் நகரங்கள், பொது இடங்களில் உலகக் கோப்பை போட்டிகளை திரையிட மறுப்பு தெரிவித்துள்ளன.

பிரிட்டிஷின் எல்ஜிபிடி உரிமைகளுக்கான தன்னார்வலர் பீட்டர் டாட்செல், “கத்தார் தலைநகர் தோகாவில் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டு சாலையோரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்,” என்றார்.

அவர் கைது செய்யப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று கத்தார் அரசு கூறியுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளை நடத்த கத்தார் ஏன் தேர்வு செய்யப்பட்டது?
2010ஆம் ஆண்டு ஃபிப்ஃபா 22 செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்தது.

இந்த போட்டிகளை நடத்தும் முதலாவது அரேபிய தேசமாகும்
ஃபிஃபா அதிகாரிகளுக்கு 3.7 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து உரிமையை பெற்றதாக கத்தார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் லஞ்சப் புகார் உண்மையல்ல என்று நிரூபணம் ஆனது.

அந்த நேரத்தில், ஃபிஃபா தலைவராக இருந்த செப் பிளாட்டர், கத்தாருக்கு உரிமை கிடைக்க ஆதரவு தெரிவித்தார். ஆனால், அது முதல் கத்தாருக்கு உரிமை கொடுத்தது தவறான முடிவாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்.

கத்தாரிடம் இருந்து உலக்கோப்பை ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்?

கத்தார் 29 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ளது. எண்ணைய், எரிவாயு ஏற்றுமதிகளின் மூலம் உலகின் வளமான நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த போட்டிகளுக்காகவே ஏழு மைதானங்களை கத்தார் கட்டமைத்துள்ளது.

100க்கும் அதிகமான புதிய விடுதிகள், ஒரு புதிய மெட்ரோ, புதிய சாலைகள் ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

பழமைவாத இஸ்லாமிய நாடு என்ற வகையில், மதுபானம் என்பது கத்தாரில் பொதுவாக சொகுசு விடுதிகளில் உள்ள பார்களில் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குவாட்டரில் பாதி அளவு கொண்ட பீர் 13 டாலர் விலை இருக்கும்.

இறுதிப்போட்டிகளின்போது, போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு மற்றும் போட்டிகள் முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு உள்ளே குறிப்பிட்ட சில பகுதிகளில் மது வழங்கப்படும் என உலக்கோப்பை போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஏன் பொதுவாக உலகக் கோப்பை போட்டிகள் கோடைகாலத்தில் நடைபெறுவதில்லை?
கத்தாரில் பொதுவாக 25 டிகிரி சென்டிகிரேட்(77 டிகிரி பாரன்ஹீட்) ஆக வெப்ப நிலை இருக்கும் போது நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18ஆம் தேதிக்கு இடையே உலகக் கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இறுதிப் போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றால், பொதுவாக போட்டிகள் 40 டிகிரி சென்டிகிரேட்டுக்கும் அதிகமாக, 50 டிகிரி சென்டிகிரேட்டை தொடுவதற்கும் சாத்தியமுள்ள வெப்ப நாட்களில் நடைபெற வேண்டிய நிலை ஏற்படும்.

தொடக்கத்தில் கத்தார், கோடை காலத்தின்போது குளிரூட்டப்பட்ட மூடப்பட்ட மைதானங்களில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளை நடத்தலாம் என்ற யோசனையை முன் வைத்தது. ஆனால், அந்த திட்டம் ஏற்கப்படவில்லை.

ஆண்டின் இறுதியில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படுவதால் என்ன சிக்கல்கள்?

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஐரோப்பிய கால்பந்து கிளப்புகள் பரபரப்பாக க் காணப்படும். பல முன்னணி வீரர்கள், கத்தார் 2022 போட்டிகளில் தங்கள் நாடுகளுக்காக விளையாட அழைக்கப்படுவார்கள்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் உள்ளிட்ட ஐரோப்பிய லீக் போட்டிகள், இத்தாலியின் சீரி ஏ மற்றும் ஸ்பெயினின் லா லிகா ஆகியவை, சர்வதேச போட்டிகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக தங்களது சீசன்களை ரத்து செய்துள்ளன.

போட்டிகள் முடிவடைந்த உடன் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments