Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்...!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன் படி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் துனிசியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

அதேபோல், மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து- சவுதி அரேபியா அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ் - டென்மார்க் அணிகள் மோத உள்ளன. அதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜெண்டினா-மெக்சிகோ அணிகள் மோதுகின்றன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments