இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 டி20 போட்டிகள் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே அக்டோபர் மாதத்தில் விளையாடி முடிக்கப்பட்டு, தற்போது 3 ஒருநாள் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னர் நடந்த 3 டி20 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 2-0 என்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 3ஆவது டி20 போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி எந்த முடிவும் இன்றி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று தொடங்கிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகிறது. பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று இங்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 66-4 என்ற நிலையில் தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் கேப்டன் பட்லர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் ரன்களை உயர்த்தினர். கேப்டன் பட்லர் சுழற்பந்துவீச்சாளர் ஷாம்பாவின் சுழலில் 29 ரன்களுக்கு வெளியேற, பின்னர் வந்த லியான் டாஸன் சிங்கிள் எடுத்து கொடுக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டேவிட் மாலன். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலன் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி 124 பந்துகளுக்கு 134 ரன்கள் எடுத்து 46 ஓவரில் ஷாம்பா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓபனர்கள் டேவிட் வார்னர் மற்றும் ட்ரெவிஸ் ஹெட் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த விக்கெட் இழப்பின்றி 19 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து அசத்தியது. 20 ஆவது ஓவர் வீச வந்த கிரிஸ் ஜோர்டன் முதல் விக்கெட்டை வீழ்த்த அரைசதம் அடித்த ஹெட் 69 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் 86 ரன்களில் வெளியேற, ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 38 ஓவர் முடிவில் 242/3 என்று ஆடிவருகிறது. ஸ்டீவன் ஸ்மித் 54 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 20 ரன்களிலும் ஆடிவருகின்றனர்.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்களின் பீல்டிங் எல்லோராலும் பாராட்டும் படி இருந்தது. முக்கியமாக 29 வயதான ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகர், இங்கிலாந்தின் டேவிட் மலன் சிக்சருக்கு அனுப்பிய பந்தை பவுண்டரி லைனில் இருந்து, பவுண்டரி லைனுக்கு உள்ளே பறந்து காற்றிலேயே சிக்சரை தடுத்து நிறுத்தியது எல்லோராலும் பாராட்டப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸ், முதல்முறையாக ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் வீசிய 45வது ஓவரின் இறுதி பந்தில், இங்கிலாந்து வீரர் மலன் ஒரு பெரிய ஷாட்டை ஆடினார்.

அது ஒரு நிச்சயமாக ஒரு பெரிய சிக்ஸராக இருக்குமாறு தான் இருந்தது, ஆஸ்திரேலியாவின் ஆஸ்டன் அகர் ஒரு அசாதாரண சேவ் மூலம் அதை சிக்சருக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தியது நம்பமுடியாதவகையில் இருந்தது. எல்லைக் கயிற்றின் அருகே பீல்டிங் செய்ய நின்று கொண்டிருந்த அவர், பந்தை சரியான இடத்தில் கைப்பற்ற பவுண்டரி லைனுக்கு வெளியே பறந்து காற்றிலேயே பிடித்து அதை உள் பக்கமாக எறிந்து சேவ் செய்தார். சிக்சரை சேவ் செய்து 1 ரன்னுடன் கட்டுபடுத்தியது நம்பமுடியாதவாறு இருந்தது.
0 Comments