Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கத்தார் விமான நிலையத்தின் பார்க்கிங் வசதிகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன...!


Qatar airports set new parking charges

ஹமாத் சர்வதேச விமான நிலையம் (HIA) கர்ப்சைடு அணுகலுக்கு (Curbside Access) நவம்பர் 1ம் திகதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளானது FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 இன் போது அனைத்து பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதுகாப்பதற்கும், சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிவருகை(Curbside arrival) பகுதியான அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். அதில் கர்வா மற்றும் லிமோஸின் போன்ற டெக்ஸிகள் உள்ளடங்கும். தனிப்பட்ட வாகனங்கள் பார்க்கிங் பகுதிகளில் மாத்திரம் நிறுத்தப்பட அனுமதிக்கப்படவுள்ளது.

பார்க்கிங் வசதிகளுக்கான கட்டணங்கள்:

HIA குறுகிய கால கார் பார்க்: அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு QAR 25. அதன் பிறகு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் QAR 100 அறவிடப்படும்

HIA நீண்ட கால கார் பார்க்: அதிகபட்சமாக 60 நிமிடங்களுக்கு QAR 25. அதன் பிறகு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் QAR 100. அறவிடப்படும்

நாள் வருகைகள்(Arrivals ) கார் பார்க்: அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு QAR 25. அதன் பிறகு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் QAR 100. அறவிடப்படும்

எதிர்வரும் 20 திகதி நடைபெறவுள்ள கால்ப்பந்து போட்டிகளுக்கான ரசிகர்கள் தற்போது கத்தாருக்கு படையெடுத்து வருவதனால் சீரான விமான நிலைய அனுபவத்தினை வழங்களே இது போன்ற புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

THANKS: QATAR-TAMIL

Post a Comment

0 Comments