சூரியனின் ஒளியில் மறைந்திருக்கும் பூமியை தாக்கு அபாயம் கொண்ட குறுங்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமி மற்றும் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு இடையில் உள்ள பிராந்தியத்தில் சூரிய அமைப்புக்குள் மறைந்திருக்கும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்கு அருகாமையில் உள்ள மூன்று குறுங்கோள்களில் ஒன்றே இவ்வாறு ஆபத்து கொண்டதாக உள்ளது.சூரிய ஒளி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் குறுங்கோள்களை கண்டுபிடிப்பது வானியலாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
2022 ஏபீ7 என்ற இந்த அபாயகரமான குறுங்கோள் சுமார் 1.5 கிலோமீற்றர் அளவு பெரியதாகும். இதன் சுற்றுப்பாதை ஒரு நாள் பூமியின் சுற்றுப்பாதையுடன் குறுக்கிடலாம் என்று கணித்திருக்கும் விஞ்ஞானிகள் அது எப்போது என்று இன்னும் உறுதியாகக் கணிக்கவில்லை.
அச்சுறுத்தல் மிகக் குறைவாக இருந்தபோதும் இந்த அளவான குறுங்கோள் ஒன்று பூமியுடன் மோதினால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்த கண்டுபிடிப்பின் முதன்மை ஆய்வாளரான ஸ்கொட் ஷெப்பர்ட் தெரிவித்தார்.
தற்போதைய சுற்றுப்பாதையில் 2022 ஏபீ7 பூமியை சுற்றிவர ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்வதோடு, அது ஒரு சில மில்லியன் கிலோமீற்றருக்கு அப்பால் பூமிக்கு நெருக்கமாக உள்ளது.
0 Comments