களைகட்டியுள்ள கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன.
தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்த கத்தாரில் குவிந்துள்ள கால்பந்து ரசிகர்களின் மத்தியில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் C பிரிவில் இடம் பெற்றுள்ள பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா விளையாடு உள்ளது.
இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் D பிரிவில் இடம் பெற்றுள்ள டென்மார்க், துனிசியாவை எதிர்த்து களம் காண்கிறது. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது போட்டியில் C பிரிவில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ போலந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இன்றைய கடைசி போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை அனுபவ ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்கிறது. இன்று நடைபெற உள்ள நான்கு போட்டிகளிலும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments