Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரிட்டனில் நீண்ட பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரிக்கை...!


aஇங்கிலாந்தின் மத்திய வங்கி, அதன் வட்டி விகிதத்தை 33 ஆண்டுகள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.75 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது 2.25 வீதத்தில் இருந்து 3 வீதம் அதிகரித்துள்ளது. 1989ஆம் ஆண்டுக்குப் பின் இதுவே மிகப் பெரிய உயர்வாகும். பிரிட்டன், அதன் மிக நீண்ட பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கவுள்ளதாக வங்கி எச்சரித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வட்டி விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வட்டி விகிதத்தை அதிகரிப்பதால், கடன் வாங்குவது குறையும் என்றும் மக்களின் செலவுகள் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில், பொருட்களின் விலையைக் குறைக்க அந்நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கியும் அதன் வட்டி விகிதத்தை, தொடர்ந்து 4ஆவது முறையாக அதிகரித்துள்ளது. வட்டி விகிதம், 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டது. 15 ஆண்டுகளில் இதுவே மிக அதிகமாக உள்ளது.

Post a Comment

0 Comments