Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்ட மூலம் : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் : ரிஷாத் நீதியமைச்சரிடம் வலியுறுத்து...!


முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

மேலும் குறைகளை திருத்திக் கொண்டு வெளிப்படை தன்மையுடன் சிறந்த தீர்மானத்தை எடுக்க ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குழுவின் பரிந்துரைக்கு அமையவே சட்டமூலம் தயாரிக்கப்பட்டது, இவ்விடயம் தொடர்பில் இவ்வாரத்திற்குள் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்இஅபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்:

நீதியமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள 11 சட்டமூலங்கள் நாட்டுக்கு அவசியமானதாகும் ஆனால் இச்சட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுத்தப்பட்டால் தான் மக்கள் அதன் பலனை பெற்றுக்கொள்வார்கள்.

ஆகவே சட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாhகரத்து சட்டம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி குழு ஒன்றை நியமித்தார்.ஒரு சில அழுத்தங்களினால் அந்த குழு இஸ்லாமிய விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது.



முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.

அவர்களுடனான ஒரு சந்திப்பை நீதியமைச்சுளோ அல்லது பாராளுமன்றத்திளோ நடத்துங்கள். பேச்சுவார்த்தைகளின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அழுத்தங்களை அடிப்படையாக கொண்டு எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.வெளிப்படை தன்மையுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்.

தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த சட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க தயார்.ஆகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்துங்கள் என நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன்.

குழுவின் பரிந்துரைக்கு அமைய அந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வார காலத்திற்குள் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என்றார். நீதியமைச்சரே மிக்க நன்றி என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments