Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்காவை வீழ்த்தி ஈரான் சாதனை படைக்குமா? இன்று நள்ளிரவு மோதல்!!


உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் நேற்றுடன் 2 ஆட்டங்களில் மோதி விட்டன.

இன்று முதல் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. ஏ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டங்களில் ஈக்வடார்-செனகல், நெதர்லாந்து- கத்தார் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் கத்தார் 2 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. 

நெதர்லாந்து, ஈக்வடார் அணிகள் 1 வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளன. இரு அணிகளும் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சென கலை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தான் வாய்ப்பை பெற இயலும். அந்த அணி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. 

குரூப்-பி பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-வேல்ஸ், ஈரான்-அமெரிக்கா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளியும், ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளியும், அமெரிக்கா 2 டிராவுடன் 2 புள்ளியும், வேல்ஸ் 1 டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளியும் பெற்றுள்ளன. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதிக கோல்கள் இருப்பதால் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது.

அஸ்கர் அலி - பத்திரிகையாளர் 
திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு

Post a Comment

0 Comments