கனடாவின் ரெஜினாவில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ரெஜினாவின் ரீடல்லாக் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்புப் படையினரும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இந்த தீ விபத்தினால் மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் யாரும் வீட்டில் இருந்தார்களா இல்லையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இந்த வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அருகாமையில் இருந்த வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டனர்.
எவ்வாறெனினும், ஆபத்து எதுவுமில்லை என அறிந்து கொண்டதன் பின்னர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு அருகாமையில் இருந்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
0 Comments