அடுத்த வாரம் தொடக்கம் ட்விட்டரின் இடைநிறுத்தப்பட்ட கணக்குகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்போவதாக அந்த சமூக ஊடகத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு முடிவை மஸ்க் கடந்த புதனன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் வாக்கெடுப்பில் பங்கெடுத்த 3.16 மில்லியன் பயனர்களில் 72.4 வீதமானவர்கள் ட்விட்டரில் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்க ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பொது மன்னிப்பு அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று மஸ்க் வியாழக்கிழமை அறிவித்தார்.
உலகின் பெரும் செல்வந்தரான மஸ்க் கடந்த வாரம் ட்விட்டரில் தடை விதிக்கப்பட்ட சில கணக்குகளுக்கு மீண்டும் அனுமதி அளித்திருந்தார். அதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரிம்பின் கணக்கும் அடங்கும்.
ட்விட்டர் நிறுவனத்திற்கு பலதரப்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய மதிப்பாய்வு சபை ஒன்றை உருவாக்கப்போவதாக மஸ்க் கடந்த ஒக்டோபரில் குறிப்பிட்டிருந்தார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments