Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்....!

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய இத்தாலியின் Rimini யில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அண்டை நாடுகளும் உணர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நிலநடுக்கம் காரணமாக நாட்டில் பல வீதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, Ancona நகரில் ரயில் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால், Marche பகுதியில் உள்ள பல பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பாவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மத்திய இத்தாலி அடையாளம் காணப்பட்டுள்ளது.

2016 முதல், மத்திய இத்தாலியில் நிலநடுக்கங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments