Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குடியேற்றங்களை அதிகரிக்க இஸ்ரேலிய கூட்டணி திட்டம்...!

தேர்வு செய்யப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கும் அவரது தீவிர வலதுசாரி கூட்டணிக்கும் இடையே அடுத்து உருவாக உள்ள அரசில் மேற்கொள்வதற்கு எட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திட்டங்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

இதில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பல டஜன் சட்டவிரோத குடியேற்றங்களை சட்டபூர்வமாக்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் கொள்கையாக ஏற்கப்பட்டால், அது பலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டு கூட்டணிகள் உடன் மோதல் போக்கை ஏற்படுத்தக்கூடும். இந்த யூதக் குடியேற்றங்களை சர்வதேச சமூகம் சட்டவிரோதம் என கருதுவதோடு, வெளிப்புற யூதக் குடியேற்றங்கள் இஸ்ரேலிய சட்டத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பென்ஜமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கூட்டணி உடன்படிக்கை முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கையை செயற்படுத்துவதை தடுக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments