Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரான்ஸில் மனைவியை கொன்ற கணவன் தற்கொலை; வெளியான அதிர்ச்சி தகவல்...!

பிரான்ஸில் மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதுடைய பெண் ஒருவர் துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி உயிரிழந்தவுடன் அவரது கணவர் உடனடியாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என உயிரிழந்த தம்பதியின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் Uzès (Gard) நகரில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Montaren-et-Saint-Médiers எனும் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கத்திக்குத்துக்கு இலக்காக்கியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த தம்பதியினருக்கு 9 மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களில் மூத்தவர் பொலிஸாருக்கு அழைப்பு ஏற்படுத்தியுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்தினை அடந்தபோது மேற்படி செயலில் ஈடுட்ட அப்பெண்ணின் கணவர் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்தை அடையும் வரையில் அவர் உயிருடனே இருந்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கணவர் 42 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் பிள்ளைகளை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments