Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பைடன் கட்சி செனட்டில் ஆதிக்கம்...!

அமெரிக்க இடைத்தவணை தேர்தலில் நவாடா மாநிலத்தில் நீடித்த முக்கிய போட்டியில் ஜோ பைடனின் அளும் ஜனநாயகக் கட்சி வெற்றியீட்டியதை அடுத்து அது செனட் சபையில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவு ஆட்சியில் உள்ள கட்சி கடந்த 20 ஆண்டுகளில் இடைத்தவணை தேர்தலில் பெற்ற சிறந்த முடிவாக உள்ளது.

இது நம்ப முடியாத மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், குடியரசுக்காரர்கள் தாம் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குடியரசு கட்சியின் வன்முறை சொல்லாடல்களை அமெரிக்க மக்கள் நிராகரித்திருப்பதை இந்த முடிவு காட்டுவதாக ஜனநாகக் கட்சி செனட் தலைவர் சக் ஸ்கம்மர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவின்படி செனட்டில் ஜனநாயகக் கட்சி 50 இடங்களையும் குடியரசுக் கட்சி 49 இடங்களையும் பெற்றுள்ளது.

எஞ்சியுள்ள ஜோர்ஜியா மாநிலத்திற்கான இரண்டாம் சுற்றுத் தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது. இதன்போது செனட்டின் ஆசனங்கள் இரு கட்சிக்கும் சரிசமமாக பகிரப்படும் நிலை ஏற்பட்டாலும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க முடியுமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அங்கு குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க இடைத் தவணை தேர்தல் கடந்த நவம்பர் 8ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால் பைடனின் திட்டங்களை முன்னெடுப்பதில் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.

Post a Comment

0 Comments