Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

reஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே புதிய உடன்பாடு...!

புதிய போர் விமானத்தை உருவாக்குவதற்கான அடுத்த கட்டத்தை தொடங்குவதற்கு ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளன.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு திட்டமாக கருதப்படுவது FCAS எனும் புதிய போர் விமானத்தை உருவாகும் திட்டம் ஆகும். இதற்கு 100 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தினை கடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கெல் ஆகியோர் முதலில் அறிவித்தனர்.

இந்த நிலையில் ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் புதிய போர் விமானத்தை உருவாக்குவதற்கான திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்குவதற்கு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூன்று நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் பெயர் தெரியாத பாதுகாப்பு வட்டாரம் கூறியுள்ளது. அதேசமயம் FCAS-யின் அடுத்த வளர்ச்சி கட்டமானது மூன்று நாடுகளும் சமமாக பகிர்ந்துகொள்ள சுமார் 3.5 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பிரான்சின் டஸால்ட், ஏர்பஸ் மற்றும் இந்தரா முறையே ஜேர்மன் மற்றும் ஸ்பெயினை பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டம் ஒன்றில், 2040 முதல் பிரெஞ்சின் ரஃபேல் மற்றும் ஜேர்மன் மற்றும் ஸ்பானிஷின் Eurofighters மாற்றத் தொடங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments