Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகக் கிண்ண கால் இறுதிக்கு நெதர்லாந்து தகுதி...!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

16 அணிகளின் சுற்றில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்காவும் நெதர்லாந்தும் மோதின.

கத்தாரின் தலைநகர் தோஹாவிலுள்ள அல் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.

இதில் 3:1 கோல்கள் விகிதத்தில் நெதர்லாந்து வெற்றியீட்டி, கால் இறுதி சுற்றுக்கு முதலாவது அணியாக தகுதி பெற்றது.



போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் டீபே முதலாவது கோலை புகுத்தினார். இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தில் நெதர்லாந்தின் 2 ஆவத கோலை டேலி பிளைன்ட் புகுத்தினார்.

74 ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் கோல் புகுத்தி அமெரிக்க அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

எனினும் 81 ஆவது நிமிடத்தில் நெதர்லாநதின் டென்ஸெல் டம்பிரைஸ் கோல் புகுத்தினார். இதன் மூலம், நெதர்லாந்து 3:1 கோல்கள் விகிதத்தில் வென்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

16 அணிகள் சுற்றில், அவுஸ்திரேலியா, ஆர்ஜென்டீன அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும அணியுடன் கால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மோதவுள்ளது.

Post a Comment

0 Comments