Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவால் தயாரிக்கப்பட்ட விமானமா இது...!?


சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இன்று விநியோகிக்கப்பட்டது.

சி919 (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது.

அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாங்காய் நகரிலுள்ள விமான நிலையத்தில் வைத்து, சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இவ்விமானம் கையளிக்கப்பட்டது.

இவ்விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை. எனினும், போயிங் 737 மெக்ஸ் மற்றும் எயார்பஸ் ஏ320 போன்ற வெளிநாட்டு விமானங்களுக்கு இவ்விமானம் சவாலாக அமையும் என சீனா கருதுகிறது.

சி919 ரக விமானத்தின் 300 விமானங்களுக்கு கொள்வனவு கட்டளைகள் கிடைத்துள்ளதாக சீன அரசுக்குச் சொந்தமான கொமர்ஷல் எயார்குரொப்ட் கோர்ப் ஒவ் சைனா நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments