Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தென்கொரியர்களின் வயதை குறைப்பதற்கு புதிய சட்டம்...!


தென் கொரிய நாட்டவர்களின் வயது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை குறைக்கப்படவுள்ளது.

தென் கொரியா வயதை கணக்கிடும் இரு சம்பிரதாயமான முறைகளை கைவிடுவதற்கான சட்டம் ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 2023 ஜூன் மாதத்தில் இருந்து “கொரியர்களின் வயது” என்று அழைக்கப்படும் முறைமை உத்தியோகபூர்வ ஆவணங்களில் அனுமதிக்கப்படமாட்டாது.

தரப்படுத்தப்பட்ட, சர்வதேசம் அங்கீகரித்த முறைமை மாத்திரமே பயன்படுத்தப்படவுள்ளது.



தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் “கொரிய வயது முறைமை” அடிப்படையில் குழந்தை பிறக்கும்போது ஒரு வயது என்று கணக்கிடப்படுவதோடு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது கூட்டப்படுகிறது.

வயதை கணக்கிடும் மற்றொரு முறைமையின்படி, குழந்தை பிறக்கும்போது பூஜ்ய வயது என்று கணக்கிட்டு பின்னர் ஜனவரி முதலாம் திகதி ஒரு வயது சேர்க்கப்படுகிறது. மதுபானம் மற்றும் புகைப்பிடிப்பதற்கான சட்டபூர்வ வயதை கணக்கிட இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

தவிர சர்வதேசம் அங்கீகரித்த வயது முறையும் தென் கொரியாவில் பயன்பாட்டில் உள்ளது.

Post a Comment

0 Comments