ரமழான் என்பது இஸ்லாத்தை சுமந்துள்ள பிரதான தூண்களில் ஒன்றாகும். அந்த தூணின் வகிபாகம் மாகோன்னதமானது.
என்றாலும் அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் அமைய ரமழான் அமையாவிட்டால் இஸ்லாம் எனும் பிரமாண்டமான கட்டிடம் சரிந்து முழுமையாக அழிந்து போய்விடும்.
அதனால், இது எனது இறுதி ரமழான் என்ற மனநிலையை ஒவ்வொரு தனிநபரும் தம்மில் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதன் ஊடாக எமது கடமையான தொழுகைகள் அனைத்தையும் மஸ்ஜிதில் நிறைவேற்றுவேன் என்று திட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு மேலானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம் - புஹாரி)
அதனால் கடமையான ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேர காலத்தில் மஸ்ஜித்தில் கூட்டாக நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவர் தான் நேசிப்பவரையும் அன்பு கொண்டவரையும் நேசிக்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சியடைவார். இது மனித இயல்பு.
அதேபோன்று இப்போது எம்மை வந்தடைந்துள்ள ரமழானையும் நோக்க வேண்டும். ரமழான் நோன்பையிட்டு நாம் அளவு கடந்து மகிழ்ச்சியடைய வேண்டும். நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட வேண்டும். அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் இறை அருளையும் பெற்றுத்தர வழி வகுக்கும்.
பல்லாண்டு கால நன்மைகளை வெறும் முப்பது நாட்களில் அடைந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக ரமழான் மாதம் அமைந்துள்ளது. அதில் லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விடவும் மேலான இரவு அமைந்திருக்கிறது. அதனால் இம்மாதம் உரிய ஒழுங்கில் உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும்.
ரமழான் என்பது இஸ்லாத்தை சுமந்துள்ள பிரதான தூண்களில் ஒன்றாகும். அந்த தூணின் வகிபாகம் மாகோன்னதமானது.
என்றாலும் அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் அமைய ரமழான் அமையாவிட்டால் இஸ்லாம் எனும் பிரமாண்டமான கட்டிடம் சரிந்து முழுமையாக அழிந்து போய்விடும்.
அதனால், இது எனது இறுதி ரமழான் என்ற மனநிலையை ஒவ்வொரு தனிநபரும் தம்மில் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதன் ஊடாக எமது கடமையான தொழுகைகள் அனைத்தையும் மஸ்ஜிதில் நிறைவேற்றுவேன் என்று திட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு மேலானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம் - புஹாரி)
அதனால் கடமையான ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேர காலத்தில் மஸ்ஜித்தில் கூட்டாக நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவர் தான் நேசிப்பவரையும் அன்பு கொண்டவரையும் நேசிக்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சியடைவார். இது மனித இயல்பு.
அதேபோன்று இப்போது எம்மை வந்தடைந்துள்ள ரமழானையும் நோக்க வேண்டும். ரமழான் நோன்பையிட்டு நாம் அளவு கடந்து மகிழ்ச்சியடைய வேண்டும். நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட வேண்டும். அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் இறை அருளையும் பெற்றுத்தர வழி வகுக்கும்.
தொகுப்பு:
-பாத்திமா அஸ்கா-
0 Comments