ரமழானில் முஸ்லிம் அரச அதிகாரிகள் தொழுகை மற்றும் சமய சடங்குகளில் ஈடுபடும் வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட ரமழான் மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை உள்ளது.
அதிகாரிகள் சமயச் சடங்குகளில் ஈடுபடும் வகையில் கூடுமானவரை சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் சிறப்பு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி…
Madawala-News
0 Comments