Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மனிதர்களை உருவாக்கும் வணக்கம்...!


ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள நிஃமத்துக்களில் இஸ்லாம் மார்க்கத்துக்கு அடுத்ததாக அல்லாஹ்வுடன் தனித்திருத்தல் சிறந்த நிஃமத்தாகும். தூக்கத்தைத் துறந்து, படுக்கை விரிப்பைப் புறக்கணித்து விட்டு அல்லாஹ்வை நின்று வணங்குவதை விட மிகச் சிறந்தது வேரொன்றும் இருக்க முடியாது.

இரவு வணக்கங்கள் தான் மனிதர்களை உருவாக்குகின்றன. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுடன் இவ்வாறு பேசுகின்றான்.

'நிச்சயமாக நாம் விரைவில் உம் மீது கடினமான சொல்லைப் போடுவோம்' 
(அல் முஸ்ஸமில் - 05)

'நிச்சயமாக இரவில் வணக்கத்தை நிறைவேற்ற எழுவதானது அதுவே மனமும், நாவும் ஒன்றிணைந்திருக்க மிக்க உறுதியானதும், இன்னும் சொல்லால் மிக்க நேர்த்தியானதுமாகும்'.
(அல் முஸ்ஸமில் - 06)

உள்ளத்தை பயிற்றுவிக்கின்ற பாடசாலைகளில் மகத்தானதொரு பாடசாலையாக இரவு வணக்கங்கள் காணப்படுகின்றன. உளத்தூய்மை இல்லாதவர்கள் அதனை மேற்கொள்ள சக்தி பெற மாட்டார்கள்.

எனவே இரவுநேரத் தொழுகை என்ற வாயில் மூலமாக எம்மை சீர்படுத்திக் கொள்வதற்கு நாம் முயற்சி செய்யவேண்டும். இரவானது

கேட்பவர்கள் திருப்பி அனுப்பப்படாததாக இருக்கிறது. அதில் உறுதி, கரிசனை கொண்டவனைத் தவிர வேறெவரும் நின்று வணங்க மாட்டான். அதனால் இரவு நேரத்தொழுகையை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வோம்.

-எம்.என்.பயாஸ் அஹமட்-

Post a Comment

0 Comments