Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹஜ்ஜின் முக்கியத்துவம்...!


ஹஜ் இஸ்லாத்தின் கடமைகளில் ஒரு முக்கிய கடமையாகும். இதைக் கொண்டே இஸ்லாமிய கடமைகளின் வரிசையும் நிறைவு பெறுகிறது. இம் மேலான கடமையை நிறைவு செய்வதில் குறைபாடு விடலாகாது.

'மேலும் அல்லாஹ்விற்காக (அவனை சந்தோஷப்படுத்த) ஹஜ் செய்வது, எவர்கள் அங்கு செல்ல சக்தி பெற்றிருக்கிறார்களோ அத்தகையவர்கள் மீது கடமையாகும். எவரேனும் (இக் கடமை நிறைவேற்றுவதை) நிராகரித்தால் அதனால் அல்லாஹ்விற்கு ஒன்றும் கஷ்டமில்லை, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான். (அவனுக்கு அதனால் என்ன தேவையுள்ளது?)' (அல்குர்ஆன் 3: 97)

ஹஜ் கடமையின் ஆரம்பம் மேலுள்ள ஆயத்து இறங்கியதிலிருந்து ஏற்பட்டதென உலமாக்கள் எழுதியுள்ளார்கள். இந்த ஆயத்தில் பல வலியுறுத்தல்கள் இருக்கின்றன. முதலாவது 'வில்லாஹி' இல் உள்ள 'லாம்' என்பது அல்லாமா ஜானி (ரஹ்) அவர்களின் கூற்றுக்கு இணங்க, கடமையாதல் என்ற கருத்தைத் தருகிறது. இரண்டாவது 'அலன்னாஸி' எனும் சொல் தவிர்க்க முடியாத கடமை என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. 

அதாவது பொருளாதார வசதி படைத்தவர்களின் மீது இக்கடமை சுமத்தப்பட்டிருக்கின்றது என்பதாகும். இந்த ஆயத்தில் பல விடயங்கள் அரபி இலக்கணம் சம்பந்தமானதாக உள்ளன. அவற்றை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் இந்த ஓர் ஆயத்தில் மட்டும் பலவகையான முக்கிய வலியுறுத்தல்கள் இடம்பெற்று இருப்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

'மேலும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் செலவழியுங்கள், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள்.' 
(அல்குர்ஆன் 2:195)

இந்த ஆயத்தில் அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் செலவழித்தலும் இடம்பெற்றுள்ளது. செலவழிக்காதவர்கள் இவ்வசனத்தின் ஊடாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர் என்பது குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்தாகும்.

உண்மையில் ஹஜ் போன்ற மிக முக்கியமான கடமையில் மனிதன் அல்லாஹ்வினால் தனக்கு அளிக்கப்பட்ட செல்வத்தை செலவழிக்கவில்லையானால் அவன் தனது கைகளினால் தன்னையே அழிவில் போட்டுக் கொள்கின்றான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹாஜியானி கலாநிதி தம்பி சாஹிப் சித்தி பரீதா...
புத்தளம் வீதி, சிலாபம்.

Post a Comment

0 Comments