Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து காசா சிறுவர்களின் உளவியல் காயங்கள் மேலும் அதிகரிக்கின்றன- ரொய்ட்டர்...!



கடந்த இரண்டு வாரகாலமாக இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் காசா சிறுவர்கள் முன்னரை விட அதிகளவு மன அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனர் என பெற்றோர்களும் உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

காசாவின் 2.3 மில்லியன் சனத்தொகையில் சிறுவர்கள் என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் இவர்களில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில் ஐநா அகதி முகாமில் குடிநீரும் உணவும் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சின் கீழ் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது.



சிறுவர்கள் வலிப்பு படுக்கையில் சிறுநீர்கழித்தல் பயம் ஆக்ரோசம் நடவடிக்கைகளில் பதற்றம் பெற்றோர் அருகிலேயே இருக்கவேண்டும் என நினைத்தல் போன்ற கடுமையான அதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர் என காசா மனநல மருத்துவர் படெல் அபு ஹீன் தெரிவித்துள்ளார்.

காசாவில் இதுவரை 4100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் 1500 பேர் சிறுவர்கள் . 13000 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கள் சிறுவர்கள் இரவில் அதிகம் துன்புறுகின்றனர் அவர்கள் இரவு முழுக்க அழுகின்றனர் திடீரென சிறுநீர் கழிக்கின்றனர் என பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ள ஆறு பிள்ளைகளி;ன் தாயார் தஹீரீர் தபாஸ் தெரிவித்துள்ளார்.

அருகில் வெடிப்பு ஏதாவது இடம்பெற்றால் அருகில் உள்ள இலக்கு ஏதாவது தாக்கப்பட்டால் சிறுவர்கள் எப்போதும் அச்சமடைகின்றனர் அலறுகின்றனர் நாங்கள் அவர்களின் பதற்றத்தை தணிக்க முயல்கின்றோம் அச்சப்படாதீர்கள் அது பட்டாசு என தெரிவிக்கின்றோம் என வீடொன்றில் தஞ்சமடைந்துள்ள பொறியியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

2021 இல் 11 நாட்கள் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து காசா சிறுவர்களின் உளவியல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை 2022 சேவ் த சில்ரன் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது.

Post a Comment

0 Comments