வடக்கு காஸா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற அனுமதிக்க இஸ்ரேல் தினசரி 4 மணி நேர போர் நிறுத்தத்தை தொடங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
காஸா பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்காக நேற்று முதல் 02 மனிதாபிமான பாதைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காஸா பகுதியில் 99 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காஸாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா ஏஜன்சி தெரிவித்துள்ளது.
0 Comments