Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சர்வதேச நீதிமன்றத்தின் ‘இரட்டை நிலை’க்கு பலஸ்தீனத்தின் எதிர்ப்பு...!



உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ஒரு வருடத்திற்குள் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி பலஸ்தீனத்தில் நடந்த ‘இனப்படுகொலை’ தொடர்பாக இதுவரை இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தயங்குவதாக பலஸ்தீனம் குற்றம் சாட்டுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்நடத்தைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு தான் காரணம் என கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவர் சுஹைர் சயீத், Sandeshaya by Saroj என்ற யூடியூப் சேனலுடன் சிறப்பு கலந்துரையாடலில் குற்றம் சாட்டினார்.



கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே காஸா பகுதியில் வாழும் பலஸ்தீன மக்களின் ‘இனப்படுகொலை’ ஆரம்பமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்ற அரசியல் தலைவர்களுடன் தான் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பலஸ்தீனத் தூதுவர், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீனத்தின் நெருங்கிய நண்பராகவே சில காலமாக இருந்து வருவதாகவும் வலியுறுத்தினார்.

அதேபோல் அநுரகுமார திஸாநாயக்க ஜேவிபி தலைமை பொறுப்பை ஏற்றதும் முதன்முறையாக பலஸ்தீன தூதரகத்திற்கு சென்றதை நினைவுகூர்ந்த பலஸ்தீன தூதுவர் சுஹைர் சயீட், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தலைவராக கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்து வெளியேற்றிய மக்கள் எழுச்சி மற்றும் ‘போராட்டம்’ தொடர்பிலும் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

Post a Comment

0 Comments