Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்...!



சிவில் அமைப்புகள் மற்றும் தொழில்வாண்மையாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி வெள்ளத்தடுப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று 23/01/2024 காத்தான்குடி நகரசபையில் நடைபெற்றது.

காத்தான்குடி இரண்டு எல்லைகளிலும் இயற்கையாக நீர்வழிந்தோடும் நீரோட்டப் பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றல்,

காத்தான்குடியின் பெரிய தோணாவை அடாத்தாகப் பிடித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற படிமுறையாக அகற்ற நடவடிக்கை எடுத்தல்
ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

நகரசபை செயலாளர் றிப்கா சபீனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் றியாஸ் சிவில் அமைப்புகள் மற்றும் தொழில்வாண்மை ஒன்றியத்தின் தவிசாளர் ULMN.முபீன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசனப் சிரேஷ்ட பொறியியலாளர் MM. தெளபீக் , சிரேஷ்ட பொறியியலாளர் Dr. நிஹாஜ் PhD, நீர்ப்பாசன சிரேஷ்ட தொழிநுட்பவியலாளரும் சிவில் அமைப்புகள் மற்றும் தொழில்வாண்மை ஒன்றியத்தின் செயலாளருமான MM.நழீம உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

- ரீ.எல்.ஜவ்பர்கான் -

Post a Comment

0 Comments