Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சுபஹ் தொழுகையுடன் பள்ளிவாசலில் நிறைவேறிய, கட்டளைத் தளபதி சந்திமாலின் ஆசை (படங்கள்)



மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க புத்தாண்டு தினத்தை ஆரம்பித்தார்.

2024 புதிய ஆண்டின் துவக்கத்தை பள்ளிவாயலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற நன்னோக்கத்தோடு அதிகாலை 5 மணிக்கு முன்னரே பள்ளிவாயலுக்கு வருகை தந்த மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் 243 இலங்கை காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க அவர்கள் தொழுகையிலும் கலந்து கொண்டார். அதன் பின் விஷேட துஆ பிரார்த்தனை நடைபெற்றது.



சுபஹ் தொழுகைக்கு சமூகமளித்த அனைவர்களுடன் கைலாகு செய்து தனது சந்தோஷத்தை புன் சிரிப்புடன் வெளிப்படுத்தினார்.



மேலும் எங்களுடன் அதிகாலை தேநீர் பரிமாற்றத்திலும் கலந்துகொண்டார்.


நன்றி...
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
Jaffna-Muslim

Post a Comment

0 Comments