Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை அறிமுகம் செய்த சவூதி...!


சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில் பங்கேற்க உதவுகிறது. மெட்டாவெர்ஸ் இன் இந்த அற்புதமான கண்டுபிடிப்பானது ஜெனரேட்டிவ் மீடியா இன்டலிஜென்ஸ் (GMI) எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு மூலம் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

GMI உடன் இணைந்து ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் 2.5 பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி droppGroup மற்றும் 'phygital' metaverse உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான தளம் மெய்நிகர் ஆய்வு மற்றும் அத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி ஹெரிடேஜ் மெட்டாவர்ஸ் தளமானது எண்ணற்ற வசீகர அனுபவங்களை பயனர்களுக்கு வழங்குகிறது. சவூதி அரேபியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் கலாச்சார காட்சிகள் வரலாற்றுச் சுற்றுப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள் மற்றும் சிறு-விளையாட்டுகள் முதல் பல்வேறு வகையான செயல்பாடுகளை தூர தேசங்களில் இருந்து நிஜத்தில் அனுபவிப்பதை போல அனுபவிப்பதற்கான சந்தர்பத்தை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.

மேலும் இத்தளமானது சவூதியின் புரட்சிகர தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஒரு சான்றாக உள்ளது. இது அன்மைய, சவூதியின் நிறுவன தின சிம்பொனி கச்சேரி போன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை வழங்குகியதும் குறிப்பிடத்தக்கது. இந்த டைனமிக் டிஜிட்டல் சூழலானது மொபைல் போன்கள், VR ஹெட்செட்கள் மற்றும் டெஸ்க்டாப்புகள் உட்பட பல சாதனங்களின் மூலம் அணுகக்கூடியதாக உள்ளது.

சவூதி கலாசாரத்தை சர்வதேச மக்களும் ரசிக்க, அனுபவிக்க வேண்டும் என அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் விரும்புகிறது. எனவே அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் கலாச்சார நிகழ்வுகளை அணுகச் செய்வதற்கான முயற்சியாக இது இருக்கிறது.

இந்தப் புதிய முன்முயற்சி, மக்கள் கலாச்சாரத்தை குறிப்பாக ஒன்லைனில் எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது.

மெய்நிகர் அனுபவங்களில் பங்கேற்பதன் மூலம், மக்கள் கலாச்சாரங்களை தம்மிடையே பகிர்வதற்கான புதிய வழியை உருவாக்கித் தருகிறது. இது தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் இரண்டினையும் இணைக்கும் பாலமாக காணப்படுகிறது.




Post a Comment

0 Comments