சிரியாவில் ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்கா சமாதானம் பேசி வரும் நிலையில், அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் திகதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 இராணுவ ஜெனரல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மட்டுமல்லாது ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க ‘ஐயன் டோம்’ அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. மறுபுறம், “சிரியாவில் இனி எந்த தாக்குதலும் நடக்காது, அதற்கு நாங்கள் கேரண்டி. ஆனால், இஸ்ரேல் மீதான ஸ்பெஷல் மிலிட்டரி ஆப்ரேஷனை மட்டும் கைவிடுங்கள்” என்று ஈரானிடம் கேட்டிருக்கிறது.
இந்த விஷயம் இஸ்ரேல் காதுக்கு செல்லவே, அதன் பிரதமர் நெதன்யாகு, “சிரியா மீதான தாக்குதல் தொடரும்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அந்த பக்கம் ஈரான், “பலஸ்தீன மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறினால்தான் எங்கள் தாக்குதல் நிற்கும்” என்று கூறியுள்ளது. அதாவது உலகின் சர்வாதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை சிறிய நாடுகளான இரண்டும் கேட்க மறுப்பு தெரிவித்துள்ளன.
இது சர்வதேச அரசியல் நடக்கும் மிகப்பெரும் மாற்றம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எத்தனையோ முறை சொல்லிவிட்டது. ஆனால் நெதன்யாகு இப்போது வரை அதை காது கொடுத்து கேட்கவில்லை. ஆசியாவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஆயுத கொள்முதலில் அமெரிக்காவின் பேச்சை இந்தியா கேட்பது கிடையாது.
ஏற்கெனவே சீனா, ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நிலையில், இப்போது இந்தியா, ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் பேச்சுக்கு மதிப்பளிக்காது, அதற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஏறத்தாழ முடிவுக்கு வந்திருக்கிறது” என்று கூறியுள்ளனர்.
0 Comments