கொழும்பு 02, வேகந்தை ஜும்ஆ மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர் பஸீர் லத்தீப் நேற்று முன்தினம் இரவு (06) காலமானார். அன்னாரின் ஜனாஸா வேகந்தை ஜும்ஆ மஸ்ஜிதில் வைக்கப்பட்டு, நேற்று (07) அஸர் தொழுகையின் பின்னர் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். எல்லோருடனும் இன்முகத்துடன் உறவாடும் இவர், வேகந்தை பள்ளிவாசலில் நீண்ட காலம் சேவையாற்றி பல்வேறு உதவிகளை செய்து வந்த ஒரு சிறந்த தலைவராக காணப்பட்டார்.
0 Comments