ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் பட்டால் எப்படி இரும்பு துருபிடித்து விடுகிறதோ, அவ்வாறு தான் இந்த இதயமும் துரு பிடித்து விடும் என்றார்கள். அப்போது ஸஹாபாக்கள், இறைத்தூதரே அதை நீக்குவது எப்படி? என்று வினவினார்கள். அதற்கு நபிகளார் மரணத்தை அதிகம் நினைப்பதும், குர்ஆனை அதிகம் ஓதுவதும் தான் அதற்கான ஒரே வழி என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(ஆதாரம்: பைஹகி)
இந்த நபிமொழியின் படி, தினமும் அல் குர்ஆனை ஓதுவது எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது. அதனால் அல் குர்ஆனை தினமும் ஓதுவதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரம், குர்ஆனை ஓதுங்கள் நிச்சயமாக அது தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் ஷஃபா அத் எனும் பரிந்துரை
செய்யக்கூடியதாக வரும்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்; முஸ்லீம்)
மறுமை நாள் என்பது ‘தனக்கு என்ன ஆகுமோ?’ என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது உதவிக்கோ எவரும் வரமாட்டார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் சட்டென வந்து உதவி செய்யக்கூடியது தான் இந்த அருள் மறையாம் அல் குர்ஆன்.
மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், குர்ஆனை மனப்பாடமாக ஓதுவது ஆயிரம் மடங்கு சிறந்தது. ஆனால் குர்ஆனை பார்த்து ஓதுவது இரண்டாயிரம் மடங்கை விட சிறந்தது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(ஆதாரம்: பைஹகி)
இந்த நபிமொழிகளின் படி, ஒவ்வொருவரும் அல் குர்ஆனை ஒத வேண்டும். இதில் இரு கருத்துக்கு இடமில்லை. அந்த வகையில் குர்ஆனை மனப்பாடம் செய்தும் ஒதலாம். ஆனால் அதனை பார்த்து ஓதுவது தான் அதிக சிறப்பு மிக்கதாகும் என்பதை நபிகளார் இந்நபிமொழியின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அதேநேரம் அல் குர்ஆனை ஒதுவதன் மூலம் ஒதுபவர் மாத்திரமல்லாமல் அவரது பெற்றோரும் நன்மை அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். இதனை நபி (ஸல்) அவர்களே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
‘எவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்கிறாரோ அவரது பெற்றோர்கள் நாளை மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படுவார்கள். அதன் ஒளி சூரியனை விட மிகப்பிரகாசமாக இருக்கும்’
(ஆதாரம்: அஹ்மது)
ஆகவே குர்ஆனை ஒதுவதன் மூலம் தம் பெற்றோருக்கு பிள்ளைகள் பெற்றுக் கொடுக்கும் மாபெரும் கௌரவமாகவே இது அமையும். அதனால் தினமும் குர்ஆனை ஓதுவதிலும், படிப்பதிலும், விளங்குவதிலும் கவனம் செலுத்துவோம். அதன் ஊடாக இறையருளைப் பெற்றுக் கொள்வோம்.
-அப்பாஸ்-

0 Comments