வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் காசாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 75 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாசின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

காசா நகரின் பாலஸ்தீன விளையாட்டு அரங்கிற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள ஷிபா மருத்துவமனை வட்டாரங்கள் தங்கள் மருத்துவமனைக்கு இவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன என தெரிவித்துள்ளன.
நாசெர் மருத்துவமனைக்கு 20க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவின் கிழக்கு பகுதியில் மதியம் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹான்யூனிசிற்கு அருகில் உள்ள முவாசியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பிள்ளைகளும் பெற்றோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகள் இஸ்ரேலிற்கு என்ன செய்தார்கள்,? இவர்கள் செய்த தவறு என்னவென அவர்களின் பேத்தியார் சுவட் அபு டெய்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Comments