இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முற்றிலும் தயாராகவுள்ளது என ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இந்த யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இஸ்ரேலிய பிரதமர் காசாவில் மோதல்களை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் இது தொடர்பில் அடுத்த வாரம் உடன்பாடு ஏற்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 Comments