
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.அபுல் ஹஸன் 87 ஆவது வயதில் கொழும்பு -09 தெமட்டகொடையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தினபதி,சிந்தாமணி பத்திரிக்கைகளில் பணியாற்றியிருந்த இவர்,பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவிலும் அலுவலக நிருபராக பணியாற்றியவர்.அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
ஊடகவியலாளரான,கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீனின் மூத்த சகோதரரான அபுல்ஹஸன் கிராம சேவகர் எம்.ஏ.தாஹா, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.முஸாதீக், எம்.ஏ.மாஜிதா ஆகியோரின் சகோதரரும் அராபியர் ஆலீம் என அழைக்கப்படும் அபுபக்கர் மெளலவியின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நேற்று இடம்பெற்றது.
0 Comments