எதிர் வரும் மீலாதுன் நபி தினத்தினை முன்னிட்டு குருநாகல் மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மாஹ் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் விசேட மார்க்க சொற்பொழிவு இடம் பெறஉள்ளது. இந் நிகழ்வில் இலங்கையின் பிரபல மார்க்க சொற்பொழிவாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கானியா அரபுக் கலாசாலையினை சேர்ந்த அஷ் ஷெஹ் லியாவுத்தீன் முப்தி (ஹில்லுரி ) அவர்கள் நபிகளார் பற்றிய விசேட சொற்பொழிவினை நிகழ்த்த உள்ளார்.
காலம் : 05.09.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மகரிப் தொழுகையினைத் தொடர்ந்து ஆண்களுக்கும்
அஸர் தொழுகையினைத் தொடர்ந்து பெண்களுக்கும்
இடம் : ஆண்களுக்கு ஜாமீயுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசல்
பெண்களுக்கு - அல்ஹசனாத் பள்ளிவாசல் மல்லவப்பிட்டி
அனைவரையும் அன்புடன் அழைக்கின்ரார்கள் மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் நிர்வாக சபையினர்.
முஸ்லிம் வானொலி செய்திகளுக்காக அப்துல் மஜீத் ஜெசீம்

.png)

0 Comments