
கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்காக இன்று கத்தார் அதிபரிடம் பகிரங்கமான மன்னிப்புக் கோரினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்தை நடத்தி வரும் நெதன்யாகு சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி மூலம் கத்தார் அதிபரிடம் மன்னிப்புக் கோரியதாக அமெரிக்க செய்தித் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவில் நடைபெற்று வரும் யுத்தத்தை நிறுத்த முடியாமல் இஸ்ரேல் - அமெரிக்கா தள்ளாடி வரும் நிலையில் பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாசுடன் கத்தார் சமாதானம் பேச வேண்டும் என்றால் நெதன்யாகு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என கத்தார் வெளிப்படையாகவே அமெரிக்க அதிபரிடம் சொல்லி விட்ட நிலையில் இன்று இந்த மன்னிப்புக் கேட்க்கும் விவகாரம் நடந்தேறியுள்ளது.
இஸ்ரேலிய வரலாற்றில் இஸ்ரேல் பிரதமர் ஒருவர் அரபு நாட்டின் தலைவர் ஒருவரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது இதுவே முதல் தடவையாகும்.

.png)

0 Comments