
இறக்குமதி செய்யப்பட்ட புனித குர்ஆன்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கான இறுதித் தீர்வை நேக்கிய கலந்துரையாடல், We Are One Organization இன் ஏற்பாட்டில் தெஹிவலை ரோஸ்வூட் சிலோன் ஹோட்டலில் நேற்று (13) இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள், அரச மற்றும் எதிர்கட்சி முஸ்லிம் பராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பு மாவட்ட பள்ளவாயல் நிர்வாகிகள், முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இறக்குமதி செய்யப்பட்ட புனித குர்ஆனை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கான இறுதித் தீர்வு குறித்து, கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஒத்துழைப்புடன் உருவாக்குவதையே நோக்காக கொண்டு கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட தடைவிதிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதியை சந்தித்து பேசுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது, புனித குர்ஆன்கள் தொடர்பில் குழு நியமிக்கப்பட்டமை தேவையற்றது எனவும் ஏனைய மதங்களுக்கு அவ்வாறான குழுக்கள் இல்லாதபோது இதற்கும் அக்குழு தேவையில்லை என நிராகரிப்பது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.png)

0 Comments