Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சவூதி அரேபிய பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவு வழங்க இந்தியா திட்டம்...!



சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகள் பேருந்து மீது டீசல் கொள்கலன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் மக்காவில் தங்கள் புனித கடமைகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, இந்த விபத்தில் அதிகமாக இந்தியர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜெய்சங்கர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களுக்கும், குடும்பங்களுக்கும் உதவி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments